“சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவி கலைக்கப்பட்டது ஏன்? மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்”- சென்னை உயர் நீதிமன்றம்!
சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்த நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்மீது குண்டாஸ் பாய்ந்தது.
இந்தநிலையில், திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழுக்கு விசாரணையில், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமின்றி, சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவியை கலைத்தது ஏன்? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.