சென்னையில் 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல்.!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் இருந்து கல்லூரி மாணவர்களை விரைவில் வெளிக்கொண்டு வருவோம்.
சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.