இரண்டு ஆண்டுகளில் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு.. இன்போசிஸ் அறிவிப்பு..!

Default Image

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸ் அறிவித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இன்போசிஸ் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறியது.

ஆனால், இரண்டு ஆண்டுகளில் 13,000 பேரை வேலைக்கு அமர்த்தியது இன்போசிஸ். இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களை ஐந்து ஆண்டுகளில் 25,000 பேரை வேலைக்கு அமர்த்த  முடிவு செய்துள்ளது.  இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில்  12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் கூறினார்.

அமெரிக்காவில் இன்போசிஸ் தனது பணிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இன்போசிஸ் அமெரிக்காவில் இந்தியானா, வட கரோலினா, கனெக்டிகட், ரோட் தீவு, டெக்சாஸ் மற்றும் அரிசோனா முழுவதும் ஆறு தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு  மையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் அமெரிக்காவில் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்