கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு.! செப்.,15-க்கு பின்னர் தொடங்கும் – அமைச்சர் அன்பழகன்.!

கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் பிஆர்க் படிக்கும் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.