கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு.! 3 பேர் உயிரிழப்பு.! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவார். இவர்கள் உயிரிழப்புக்கு காரணம் குறிப்பிட்ட கொரோனா வார்டில் ஆக்சிஜன் வினியோக தட்டுப்பாடுதான் என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எம்.பூவதி அவர்கள், மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் ரவிநாதன், மருத்துவ துறை தலைவர் சி.பாபு ஆனந்த், மற்றும் செவிலியர்கள் 5 பேர் என 7 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையமானது, மருத்துவ கல்லூரி இயக்குனர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.