இந்த மாதம் இந்தியா – ஜெர்மனி இடையே 160 விமானங்களை இயக்க திட்டமிடும் லுஃப்தான்சா.!
லுஃப்தான்சா விமான நிலையம் இந்த மாதம் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே 160 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மாதத்தில் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 160 விமானங்களை இயக்கப்போவதாக லுஃப்தான்சா நேற்று தெரிவித்து. இந்தியாவும் ஜெர்மனியும் இந்த ஆண்டு ஜூலை மாதம் இருதரப்பு விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, இரு நாடுகளின் விமான நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுடன் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்கவுள்ளது.
ஒரு அறிக்கையில், லுஃப்தான்சா நிர்வாகம் கூறுகையில், செப்டம்பரில் மட்டும் லுஃப்தான்சா இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையே 160 விமானங்களை வழங்கவுள்ளது. ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கவுள்ளது இது ஆகஸ்ட் மாதத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.