வைரல் வீடியோ: உணவை தேடி சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த கரடி.!
சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த கரடி கண்டு பொதுமக்கள்அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
வட கலிபோர்னியாவில் உள்ள தாஹோ ஏரியின் கிங்ஸ் பீச் சேஃப்வே என்ற ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கரடி தீடிரென உள்ளே நுழைந்தது. கரடியை கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஆனால் அந்த கரடி ஒரு சேதமும் ஏற்படுத்தாமல், தனக்கு தேவையான உணவை மட்டும் எடுத்து கொண்டு அமைதியாக சென்றது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ரூபி நெவாரெஸ் கூறுகையில், எனக்குத் தெரிந்தவரை கடைக்குள் கரடி வருவது இரண்டாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று ஒரு கரடி இதே கடையில் டொர்டில்லா சில்லுகள் கொண்ட ஒரு பயை தூக்கி சென்றது என கூறினார்.