5 மாதங்களுக்குப் பிறகு வலை பயிற்சியில் ஈடுபட்டதால் சிறிது பதற்றமாக இருந்தது- விராட் கோலி..!

Default Image

உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடை ந்தனர்.மேலும் ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற அணைத்து கிரிக்கெட் வீரர்களுகளும் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 5 மாதங்களுக்குப் பிறகு பேட்டை எடுத்துள்ளதாகவும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்
சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், அதில் பேட்டை பிடிக்கும்போது முதல் பந்தை எதிர் கொள்ளும்போது மிகவும் பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது.

எதிர்பார்த்ததைவிட முதலாவது வலைப்பயிற்சி மிகவும் சிறப்பாகவே இருந்தது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் உடல் தகுதியுடனும் வலிமையாக இருப்பதாகவும் நான் உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்