இன்று முதல் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.!
இங்கிலாந்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இங்கிலாந்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 40% பள்ளிகள் மட்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பதை அடுத்து புது கல்வியாண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்கள் பெரிதும் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் கட்டாயமாக ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.