நடப்பாண்டிற்கான ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு.!

Default Image

நடப்பாண்டிற்கான ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியிருந்து.  அந்த வகையில் இந்தாண்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31-ஆம் தேதியாக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனவே தொழில் பாதிப்பு மற்றும் பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 2019-2020ம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி என்ற சரக்கு சேவை வரியை தாக்கல் செய்வதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால தாமத கட்டணத்தையும், அதற்கான வட்டியையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்