உயிரிழந்த தூத்துக்குடி போலீஸ் சுப்ரமணியம் குடும்பத்துக்கு 86.50 லட்சம் தென்மண்டல போலீஸ் சார்பில் நிதி உதவி!

Default Image

ரவுடியை பிடிக்கச் சென்ற போது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட தூத்துக்குடி போலீஸ் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு தென்மண்டல காவல்துறையினர் சார்பில் 86 6.50 லட்சம் நிதி உதவி.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியான துரைமுத்து என்பவரை கடந்த 18ம் தேதி தனிப்படை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது ரவுடி துரைமுத்து வீசினார். இந்த சம்பவத்தில் போலீசார் சுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்துள்ளார், மேலும் அந்த வெடிகுண்டு வெடித்த இடத்தில் ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார்.
உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில்தற்பொழுது தென்மண்டல போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய போலீசாரின் பங்களிப்பில் தற்போது போலீஸ் சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு 86.50 லட்சம் நிதி திரட்டப்பட்டு தென்மண்டல போலீஸ் ஐஜி முருகன் அவர்களால் நேற்று ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை சுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி வழங்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்