சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் பட்டினப்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி, மாம்பலம் உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.