“பிரணாப் முகர்ஜீ உயிரிழந்ததற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்!”- முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அவரின் மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்ரீ பிரணாப் முகர்ஜி உயிரிழந்ததற்கு எனது இரங்கல் செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
My heartfelt condolences on the passing away of Shri #PranabMukherjee . Om Shanti pic.twitter.com/Q2noCKVFnq
— Virender Sehwag (@virendersehwag) August 31, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025