தமிழகத்தில் நாளைமுதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு.! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

Default Image

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளைமுதல் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைபடி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. அதில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளைமுதல் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல் கட்டாயம். உடல் வெப்பநிலை சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும். காலணிகளை நுழைவு வாயில்களில் அவரவர் எடுத்து வைத்து விட்டு செல்ல வேண்டும். கைகளைக் கிருமி நாசினி கொண்டு கால்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும். கால அபிஷேகம், அர்ச்சனை, உபய கட்டணம் சேவைகள் உள்ளிட்டவற்றில் பங்கு கொள்வதை தவிர்க்கவும். அர்ச்சகர்கள் பக்தர்களை தொட்டு குங்குமம், தீர்த்தம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வழங்க அனுமதி இல்லை. உண்டியலை தொடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து காணிக்கை செலுத்தலாம்.

கொடிமரம் உள்ளிட்ட ஏனைய இடங்களில் அமர்வது விழுந்து வணங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள், கர்ப்பிணிகள் வழிபாட்டுத் தலங்களுக்கு வர தடை என்றும் வழிபாட்டுத் தலங்களில் வழிபாட்டின் போது 6 அடி தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets