சென்னையில் தொழிலதிபரை கடத்தி 2 கோடி கொள்ளை! கொள்ளையர்கள் குடும்பத்துடன் கைது!
சென்னையில் திவான் எனும் தொழிலதிபரை கடத்திய கொள்ளையன் மற்றும் கூட்டாளி கைது.
சென்னையில் மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர் என்பவர் கடந்த 17 ஆம் தேதி கடத்தப்பட்டதாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் தவ்பீக் என்பவருக்கும் திவான் அக்பருக்கும் இடையே ஹவாலா பணப் பரிமாற்ற தொழில் போட்டி நீண்ட காலமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சனையில், தவ்பீக் அவரது மனைவி மற்றும் 5 கூட்டாளிகள் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்று கூறி, திவானை கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும், திவானிடம் இருந்து 2 கோடி கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.