#Coronaupdate: தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,249 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,34,436 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,231 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 6,406 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,62,133 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 47,38,047 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது 52,721 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.