மன அழுத்தத்தால் தாய், சகோதரனை சுட்டு கொன்ற 14 வயது சிறுமி.!
மன அழுத்தம் காரணமாக தனது தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கியால் 14 வயது சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ரயில்வே துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டவர். லாக்டவுன் காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த சிறுமி தனது மணிக்கட்டை வெட்டியுள்ளார். அதனையடுத்து குளியலறையில் உள்ள கண்ணாடியில் ‘தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வாசகத்தையும் ஜாம்மால் (Jam ) எழுதிவிட்டு, கண்ணாடியை துப்பாக்கியால் சுட்டு உடைத்துள்ளார்.
மேலும் குளித்து கொண்டிருந்த தனது தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொன்றுள்ளார். அதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தனது பாட்டியிடம் கொலை செய்ததை ஒப்பு கொண்டதுடன், இறந்தவர்களின் அருகே சிறுமி உபயோகிக்கும் 22 காலிபெர் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமி எதற்காக தாய் மற்றும் சகோதரனை கொலை செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சிறுமி மன அழுத்தத்தில் இருந்ததால் கொலை செய்ய வாய்ப்புள்ளதாகவும் போலீசாரிடம் சந்தேகம் உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.