ராஜபாளையம் , சிப்பிபாறை நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேட்டை நாய் வகையைச் சார்ந்தது இராஜபாளையம் நாய் ஆகும்.இராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால், இந்நாய் இந்த பெயரைப்பெற்றது.அதேபோல் சிப்பிப்பாறை தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாய் இனமாகும்.இந்த நாயும் வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு ” மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களிடம் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், ராஜபாளையம், சிப்பிபாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.