ஃபேஸ்புக் -பாஜக இடையே ரகசிய உறவு ! விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் கடிதம்
ஃபேஸ்புக் -பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது என செய்தி வெளியான நிலையில் அது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
BJP & RSS control Facebook & Whatsapp in India.
They spread fake news and hatred through it and use it to influence the electorate.
Finally, the American media has come out with the truth about Facebook. pic.twitter.com/Y29uCQjSRP
— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2020
இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவிட்ட பதிவில் , பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தார் .மேலும் அதன் மூலம் பாஜக போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றது. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கருத்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராகுலின் கருத்துக்கு பதில் அளிக்கையில்,தனது கட்சியில் உள்ளவர்களிடமே செல்வாக்கை பெற முடியாத அவர் , உலகம் முழுவதும் பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பிடிபட்டவர், தற்போது எங்களை கேள்வி கேட்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.அவரது கடிதத்தில்,இந்தியாவை பொருத்தவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு பரபட்சமானதாக உள்ளது.மேலும் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகவும் அமைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மட்டும் அல்லாமல் மற்ற கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கிளப்பியது. எனவே ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை குழு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
America’s Time magazine exposes WhatsApp-BJP nexus:
Used by 40 Cr Indians, WhatsApp also wants to be used for making payments for which Modi Govt’s approval is needed.
Thus, BJP has a hold over WhatsApp.https://t.co/ahkBD2o1WI
— Rahul Gandhi (@RahulGandhi) August 29, 2020
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையின் பதிவை பதிவிட்டார்.அவரது பதிவில்,அமெரிக்காவின் டைம் பத்திரிகை வாட்ஸ் அப்-பாஜக உறவை அம்பலப்படுத்தியுள்ளது. 40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், அதன் மூலமாக பணம் செலுத்துவதற்கு மோடி அரசின் ஒப்புதல் தேவைப்படும் என்பதால் அதனை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், வாட்ஸ்அப் மீது பாஜகவுக்கு ஒரு பிடி உள்ளது என்று பதிவிட்டார்.இந்நிலையில் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் , ஃபேஸ்புக் -பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது என அமெரிக்க ஊடகத்தில் வெளியானது குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.