“பைடன் ஆட்சிக்கு வந்தால் மக்கள் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது”- டிரம்ப்!
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.
அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். இருதரப்பு தேர்தல் பிரச்சாரங்களும் தற்பொழுது சூடுபிடித்து வருகிறது.
அந்தவகையில், வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பைடன் ஆட்சிக்கு வந்தால் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பைடன் அமெரிக்காவின் மகத்துவத்தை அழித்துவிடுவார் என கூறிய டிரம்ப், ஜோ பைடன் அமெரிக்காவின் வேலைகளை அழிப்பவர், எனவும், வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர் அமெரிக்க மகத்துவத்தை அழிப்பவராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.