ஒடிசாவில் JEE தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து மற்றும் தங்கும் வசதி!
ஒடிசா மாநிலத்தில் JEE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிடம் வசதி செய்து தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் JEE முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரையும், நீட் தேர்வுகள் 13ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒடிசாவின் ஏழு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள JEE தேர்வு மையங்களில் இருந்து 37 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
இந்நிலையில் இந்த 37 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிடம் வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒடிசா தலைமை செயலாளர் திரிபாதி அவர்கள் தெரிவித்துள்ளார். வருகிற நீட் தேர்வுக்கும் இதே போல ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.