ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனை நிறைவு
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 31-ஆம் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.தற்போது மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனை நிறைவுபெற்றுள்ளது .சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா ? என்பது ஆலோசனைக்கு பின்னர் தான் தெரியும்.