மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு.!
காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது. இதையத்தொடர்ந்து மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை தற்போது நிறைவடைந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லை தளர்வு அளிக்கப்படுமா ? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவுபெற்ற நிலையில், இன்று மாலை மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் பழனிசாமி.