அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் – உள்துறை அமைச்சக அதிகாரி.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சகம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடத்த 2 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, அமித்ஷா, அவரது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் என்று உள்துறை அமைச்சகம் அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அமித்ஷா நலமுடன் உள்ளார் என்றும் ஓய்வும், சிறப்பு கவனிப்பும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025