மாஸ்க் அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை – மத்திய விமான போக்குவரத்துத்துறை

மாஸ்க் அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மாஸ்க் அணியாதவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025