“தமிழகத்தில் அதிமுகவில் ஹவுஸ்ஃபுல்.. திமுக தான் காலியாக உள்ளது”- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!
தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 11 எம்.எல்.ஏ. விவகாரத்தில் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இதில் மறைக்க எதுவும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு விளக்கங்களின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்குவார் என கூறினார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.