செப்டம்பர் 1 முதல் ஓலா, உபெர் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில்

Default Image
உபெர் மற்றும் ஓலா டிரைவர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளனர்.
என்.சி.ஆரின் தடைசெய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்துக்கு மத்தியில், ஓலா மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்களில் பணி புரியக்கூடிய ஓட்டுநர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர்.
மேலும் அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் என்.சி.ஆரின் சங்கத்தில் உள்ள சுமார் 2 லட்சம் ஓட்டுனர்கள் உடன் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் என டெல்லியில் உள்ள சர்வோதயா ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் கமல் அஜீத் அவர்கள் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்னும் பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் இந்த நடைமுறை இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்