#BreakingNews : இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் , விரைவில் தேர்வு அட்டவணை – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் , விரைவில் தேர்வு அட்டவணை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனிடையே கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், யுஜிசி (UGC ) வழிமுறைகளைப் பின்பற்றி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தி முடிக்கப்படும். விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.இறுதி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? நேரடியாக நடைபெறுமா என்று பின்னர் அறிவிப்போம் என்றும் அறிவித்துள்ளது.