781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி!
781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
கொரோனா மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், அரசின் அறிவுரைக்கு ஏற்ப அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும், திருவாரூரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த 10,014 பேருக்கு வீட்டுமனைப் பட்டா முதியோர் உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளன. ரூ.11.50 கோடி மதிப்பிலான முடிவுற்ற 14 திட்டப் பணிகளையும் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். 33 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், 781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.