தனது தந்தை போனில் இருந்து 2,600 ரூபாய்க்கு தின்பண்டத்தை ஆர்டர் செய்த 3 வயது சிறுவன்.!

அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய்க்கு பிரெஞ்சு ப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளான்.
அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் யூ-டியூப் வீடியோ பார்த்து கொண்டிருந்துள்ளான். அப்போது இடையே வரும் விளம்பரத்தை கிளிக் செய்து அதன் மூலம் அருகிலுள்ள மெக் டொனல்ட்ஸ் ஹோட்டலில் பிரெஞ்சு பிரைஸ் எனும் பொறித்த தின்பண்டத்தை ஆர்டர் செய்துள்ளான்.
இதன் விலை சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய் ஆகும். இந்த ஆடர் விவரம் எல்லாம் அந்த ஆர்டர் வீட்டிற்கு வரும் வரையில் பெற்றோர்களுக்கும் தெரியாது.
டெலிவரி செய்யும் ஆள் வீட்டு கதவை தட்டிய பிறகு தான் ஆர்டர் செய்து இருந்தது தெரியவந்தது. மேலும், இது நாங்கள் ஆர்டர் செய்யவில்லை என அந்த மூன்று வயது சிறுவனின் பெற்றோர் டெலிவரி செய்ய வந்த ஆளிடம் கூறியுள்ளனர். ஆனால், டெலிவரி மனிதன் இது தங்கள் வீட்டிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டது தான் என கூற 2,600 ரூபாய் பிரெஞ்சு பிரெய்ஸை தந்து விட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர்தான் தனது 3 வயது சிறுவன் தனது போன் மூலம் ஆர்டர் செய்து சுட்டி பையனின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது. இதனை அச்சிறுவனின் தயார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.