ஒட்டன்சத்திரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை! காரணம் இதுதானா?
ஒட்டன்சத்திரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சாஸ்தா நகரை சேர்ந்த முருகேசன் என்பவற்றின் மகள் ரித்திகா அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில் 11 வகுப்பு முடித்துள்ளார். தற்போது, பனிரெண்டாம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூல வகுப்பு நடைபெற்று வரும் நிலையில், பெற்றோரிடம் செல்போன் வாங்கி கேட்டுள்ளார்.
ஆனால், அந்த மாணவியின் பெற்றோர் குடும்ப வறுமை காரணமாக செல்போன் வாங்கி கொடுக்க முடியாததால், ரித்திகா விரக்தியில் தற்கொலை செய்துள்ளார்.