தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜு!

Default Image

அடுத்த மாதத்தில் தமிழகம் முழுவதிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்ட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளது. இன்று அங்கு ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி தேவையான பொருட்கள் மற்றும் உரங்கள் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புறங்களில் ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகரிப்பதும் வாடகைக்கு கடைகள் கிடைக்காததையும் கருத்தில் கொண்டு நடமாடும் ரேஷன் கடைகள் கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளை மூடுவதற்கு திட்டமிடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது போகிற போக்கில் குண்டை போட்டு விட வேண்டாம் என பதிலளித்துள்ளார். மேலும் 13 லட்சம் கிஸான் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு தடையின்றி கடன் வழங்கி வருவதாகவும், அடுத்த மாதத்தில் தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் நிச்சயம் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்