18 வயது சிறுமியை கற்பழித்து விட்டு கொலை செய்த வழக்கு.! இளைஞர் கைது.!
18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கத்தியால் அறுத்து கொன்ற வழக்கில் தில்ஷாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உத்திரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 18 வயது சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அதனையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது யார் என்ற விசாரணையை போலீசார் நடத்தி வந்தனர். அப்போது, சிறுமி கடந்த சில மாதங்களாக அவரது மொபைலிருந்து தில்ஷாத் என்ற இளைஞனுடன் அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி ஆகஸ்ட் 24-ம் தேதி சந்தைக்கு சென்ற போது அவரை பின்தொடர்ந்து தில்ஷாத் பேச முயன்றதாகவும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஒப்பு கொண்டார். அதன் பின்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தொண்டையை அறுத்து கொன்றதையும் தில்ஷாத் ஒப்பு கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் படி, கொலைக்கு பயன்படுத்திய கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் கைரேகைகள், இரத்த கறை படிந்த உடைகள் என அனைத்தும் குற்றவாளி தில்ஷான் என்பது உறுதியாகியுள்ளது.