#BreakingNews : உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் – உச்சநீதிமன்றம்
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .
கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.அதில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் இருப்பினும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.