கனமழை எதிரொலி : ஆப்கனிஸ்தானில் 70 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Default Image

ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் கோடை காலமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவில் பெய்வதுண்டு. அதன்படி ஆண்டுதோறும் அங்கு அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி ஆப்கானிஸ்தானில் இடைவிடாத கனமழை பெய்துள்ளது. இதனால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து உள்ளதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது. இந்த வெள்ளத்தில் 300 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த வெள்ளத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலர் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk
AIADMK bjp
goat vijay gbu ajith