அதிகரிக்கும் கொரோனா.. தலைநகரில் மேலும் 1,693 பேருக்கு கொரோனா!

Default Image

டெல்லியில் மேலும் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,65,764 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக உள்ளது. மேலும் 1,154 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,48,897 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி 12,520 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்