எனக்கு கொரோனா நெகட்டிவ்.! எனது பெற்றோருக்கு கொரோனா பாசிட்டிவ் – நடிகை தமன்னா
தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நடிகை தமன்னா அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமன்னா கூறுகையில், கடந்த வாரம் இறுதியில் என் என்னுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறிகளை கண்டோம். உடனடியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி, அதில் எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர்களின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றி வருகிறோம். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும், எனக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடவுளின் அருளால் எனது பெற்றோர் நலமுடன் இருக்கின்றனர். மேலும் உங்களது பிரார்த்தனைகள் மற்றும் ஆசிர்வாதங்களால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று கூறியுள்ளார்.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) August 26, 2020