பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் – எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் எஸ்.பி.பியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இன்று மதியம் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்பாவுக்குச் சிகிச்சை தரும் ஒட்டுமொத்த மருத்துவக் குழுவையும் சந்தித்தேன். அப்பாவின் நிலை பற்றி அவர்கள் என்னிடம் சொன்னார்கள். 2 நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தபோது எந்த நிலையில் இருந்தாரோ அதை விட தற்போது அவர் தேறியிருக்கிறார். நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள் என்று தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024