நம்ப முடியாத சாதனை.. உங்கள் சாதனைக்கு பல வாழ்த்துக்கள்.!
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் கும்ப்ளே 619 ஆகியோரும் உள்ளனர்.
ஆனால், இவர்கள் அனைவரும் சுழற் பந்து வீச்சாளர்கள், சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆவார்.600 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.
மேலும் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்தி சாதனை வாழ்த்தி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ட்வீட்டர் பக்கத்தில் என்ன நம்பமுடியாத சாதனை உங்கள் சாதனைக்கு பல வாழ்த்துக்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு 17 வருட காலப்பகுதியில் உங்கள் மனக்கட்டுப்பாடு, விடாமுயற்சி மற்றும் துல்லியமான பந்துவீச்சுக்கு ஒரு சான்றாகும் என்று ட்வீட் செய்துள்ளார்.
What an incredible achievement @jimmy9! Many congratulations on your feat.
6️⃣0️⃣0️⃣ wickets in Test Cricket over a span of 17 years for a fast bowler is a testament to your grit, perseverance and accurate bowling. pic.twitter.com/nQok5bgbOG
— Sachin Tendulkar (@sachin_rt) August 25, 2020