நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்த தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் – தேசிய தேர்வு மையம் அறிவிப்பு

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்த தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் என தேசிய தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அண்மையில், இது குறித்து ஒரு அறிக்கை ஒன்று வெளியானது அதன் படி, ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையிலும், நீட்  செப்டம்பர் 13-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கிடையில், பல அரசியல் பிரமுகர்கள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, திட்டமிடப்பட்ட தேதிகளில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் என்றும் ஜேஇஇ தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை 570-லிருந்து 660 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதுமட்மில்லாமல் நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் 2,546ல் இருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்