புனேவில் தொடங்கிய ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2- ம் கட்ட மனித சோதனை!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தொடங்கியது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் உலகநாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாடுகள் மருந்து கண்டுபிடித்து, பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒரு பங்காக, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. அதை மனிதர்களிடம் சோதனை செய்தனர். அப்பொழுது தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மனித சோதனைகாக புனேவில் உள்ள பாரதி வித்யாபீத்தின் மருத்துவக் கல்லூரிக்கு இந்த மருந்துகள் வந்தடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த மருந்தின் இரண்டாம் சோதனைக்காக 17 கல்லூரி நிறுவனங்கள் தேந்தெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒன்றான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. இன்று காலை மருந்தின் சோதனையை தொடங்கியுள்ளதாக அந்த மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியப்பின், மருத்துவமனையின் துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜீதேந்திர ஓஸ்வால், தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர், தன்னார்வலர்களின் நிலைகுறித்து சோதனை நெறிமுறையின்படி கண்காணிக்கப்படுவார்கள் என கூறினார்.
இந்த சோதனை, புனேவில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ், பாட்னாவில் உள்ள ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் நிறுவனம், சண்டிகரில் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோரக்பூரில் உள்ள நேரு மருத்துவமனை மற்றும் ஆந்திர மருத்துவக் கல்லூரி, விசாகப்பட்டினம் ஆகிய மருத்துவமனைகளில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.