7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது.
இந்நிலையில் நீட் ,ஜேஇஇ ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி நடத்தும் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ,சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் ,ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ,மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ,பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் ,ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.