#BREAKING: நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு.!
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போது ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.