கேரள தலைமைசெயலகத்தில் தீ விபத்து.! எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

Default Image

கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டது என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இவை சிறிய தீ விபத்து என்பதால் அங்குள்ள தீயணைப்பு கருவிகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும், சில ஆவணங்கள் ஏறிந்து போனதாக கூறப்படுகிறது.

அலுவலகத்தில் உள்ள ஏசி பழுதடைந்து அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணத்தால் அதிலிருந்து தீ பற்றிக்கொண்டது என தலைமை செயலர் விஷ்வா மேக்தா விளக்கமளித்தார்.

இந்நிலையில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல அது திட்டமிட்ட நடத்தப்பட்டது என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதாலா நிகழ்விடத்திற்கு வந்து, தங்க கடத்தல் ஆவணங்களை அழிப்பதற்காக தீ வைக்கப்பட்டுள்ளது என கேரள அரசு மீது குற்றம் சாட்டி, மேலும், இந்த தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும் கூறினார்.

பத்திரிகையாளர்களையும் சட்ட சபை உறுப்பினர்களையும் தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்காதது ஏன் எனவும் கூறி எதிர்கட்சியினருடன் சாலை மறியலில் ரமேஷ்சென்னிதாலா  ஈடுபட்டார். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கேரள அரசு தரப்பில் அமைச்சர் இ .பி.ஜெயராஜ் கூறுகையில், ‘ எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தை எதிர்க்கட்சியினர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.’ என குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Amaranth Victory Ceremony
Maharastra CM Eknath shinde - Maharastra Deputy CM Devindra Fadnavis
TN Weatherman Update
gold price
Dr Ramadoss - Tamilnadu CM MK Stalin
Vaibhav Suryavanshi