“மு.க.ஸ்டாலினால் திமுக கற்பூரம் போல் கரைந்து வருகிறது”- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
மு.க. ஸ்டாலின் இருந்து வரும் காரணத்தினால் திமுக கற்பூரம் போல கரைந்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரம், ஆட்டுத்தொட்டி பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நாடகத்தை நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் வரும் தேர்தலில் கூட்டணி அமையுமென கூறினார்.
மேலும் பேசிய அவர், அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா இருந்த போது கட்சி எந்த பலத்தில் இருந்ததோ, அதே பலத்தில்தான் தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்த அவர், திமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளை ஒன்றிணைக்க தெரியாமல் மு.க.ஸ்டாலின் இருந்து வரும் காரணத்தினால், திமுக கற்பூரம் போல் கரைந்து வருகின்றதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.