கோலி, தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வழக்கு – மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!

Default Image

சூதாட்ட நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில், நேரடி சூதாட்டத்திற்கு தடை செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் சூத்தாட்டங்கள் அதிரிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்கிற்காக விளையாடும் இளைஞர்கள், பின்னர் அதற்கு அடிமையாகும் சூழல் உருவாகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் கவரப்படுகின்றனர் என்று குற்றசாட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் திரும்ப கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குமுன் ப்ளுவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவதை அடுத்து உயர் நீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஆபத்தானது என்பதால் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகையை சூதாட்ட நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உய்ரநீதிமன்றம் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அடுத்த மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்