விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு ! குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர்  பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மை காலமாக தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில்  ஆகிய இருவர்  உயிரிழந்தனர்.

 இந்நிலையில்  விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர்  பழனிசாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்