ட்ரம்ப்பை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்த குடியரசுக் கட்சி.!

Default Image

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் மற்றும் துணை அதிபர் தேர்வு  நடைபெறவுள்ளது. இதனால்,  ஜனநாயகக் கட்சி, மற்றும் குடியரசுக் கட்சி தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில்  அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக  இந்திய வம்சாவளியை சார்ந்த கமலா ஹாரிஸ்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக மீண்டும்  ட்ரம்ப்பும் , துணை அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ் வேட்பாளர்களாக  நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ட்ரம்ப்பும், மைக் பென்ஸ் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வமாக நேற்று தான் குடியரசுக் கட்சி அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்