தமிழக அரசே விழித்தெழு அல்லது விலகிவிடு.! – கமல்ஹாசனின் காரசார ட்வீட்.!

Default Image

விலைவாசி உயர்வு, தொழில் பாதிப்பு, அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் ஆகியன தமிழகத்தில் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறி.  – கமல்ஹாசன் டிவீட்.

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தாலும், முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளன மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன்,  ‘ சமீபத்தில் நடத்தப்பட்டசிஆய்வுகள், தமிழகத்தில் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டது என குறிப்பிடுகின்றன. மேலும், விலைவாசி உயர்வு, தொழில் பாதிப்பு, அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் ஆகியன தமிழகத்தில் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறி.  தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. தமிழக அரசே விழித்துக்கொள், அல்லது விலகிவிடு.’ என்பனவாறு பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்