மும்பையில் குறைந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 743 பேருக்கு தொற்று உறுதி!

Default Image

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் ஓரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,091 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,025 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,11,084 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18,263 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைககம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்